மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலக உத்தியோகத்தர்கள்!

வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் உதவி பிரதம செயலாளர் சத்திய பிரியா தலைமையிலான உத்தியோகத்தர் குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த உத்தியோகத்தர்களை, மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த் தலைமையிலான பதவி நிலை உத்தியோகத்தர்கள் இணைந்து வரவேற்றனர்.

இதன்போது, 2025ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமைக்கான காரணிகள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட உற்பத்தித்திறன் செயற்பாடுகள் தொடர்பாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரினால் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் வளங்கள், முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தளங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் வருகை தந்த உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து, வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலகத்தின் பல்வேறு கிளைகளுக்கும் விஜயம் செய்து, அங்கு முன்னெடுக்கப்படும் உற்பத்தித்திறன் சார்ந்த செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர்.

மாவட்ட செயலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உற்பத்தித்திறன் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் தமது பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஸ், மாவட்ட செயலக கணக்காளர் ரீ.மதன் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உற்பத்தித்திறன் உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects