இன்று உலக குடியிருப்பு தினம்!

உலக குடியிருப்பு தினம் இன்று (05.10.2026) “அனைவருக்கும் போதுமான வீடுகள்” என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகளாவிய வீட்டுவசதி நெருக்கடி, இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் வீடற்ற மக்களுக்குப் பாதுகாப்பான இருப்பிடங்களை வழங்க வேண்டியதன் அவசியம் என்பவற்றை இந்த தினம் வலியுறுத்துகிறது. 

உலக மக்கள் தொகையில் 3 பில்லியனுக்கும் அதிகமானோர் முறையான வசதிகளற்ற வீடுகளில் வாழ்வதாகவும், 1.1 பில்லியனுக்கும் அதிகமானோர் நிலையான இருப்பிடங்கள் இன்றி வசிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

இதேவேளை, உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்பட்ட 5,000 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects