மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்த ஒத்திகை நிகழ்வு 28.09.2026 அன்று வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ்வொத்திகை, வந்தாறுமூலை மேற்கு மற்றும் சித்தாண்டி 2, 3, 4 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நடைபெற்றது.
வெள்ள அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுதல், மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒத்திகையாக முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி டி.சசிதரன், இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள், இலங்கை செஞ்சிலுவைச் சங்க உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
வெள்ள அனர்த்த காலங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியதன் அவசியம் மற்றும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலும் இதன்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








