கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண குறுந்திரைப்படப் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வானது 29.09.2026 அன்று திருகோணமலையில் நடைபெற்றது.
இக் குறுந்திரைப்படப் போட்டியில் பாலஸ்ரீகந்தராஜா தினேஷ்காந்தின் இயக்கத்தில் உருவான ‘மகுடி’ குறுந்திரைப்படம் முதலாம் இடத்தையும் தினு மகேந்திரன் இயக்கத்தில் உருவான ‘கேமரா’ குறுந்திரைப்படம் இரண்டாம் இடத்தையும் U.A.S. தனஞ்சய இயக்கத்தில் உருவான ‘Night Time with Mickey Mouse’ குறுந்திரைப்படம் மூன்றாம் இடத்தையும் K. கிஷாந்தின் இயக்கத்தில் உருவான ‘Retake’ குறுந்திரைப்படம் நான்காம் இடத்தையும், ஐந்தாம் இடத்தை N. நிருஷாந்தின் இயக்கத்தில் உருவான ‘யாழினி’ குறுந்திரைப்படமும் பெற்றுள்ளது.
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்திற்கான விருதை Pasan Bhagya இயக்கத்தில் உருவான ‘Ekama Ahasak Yata’ குறுந்திரைப்படம் பெற்றுள்ளது.
‘மகுடி’ திரைப்படம் முதலிடத்தைப் பெற்றதுடன், தனிநபர் விருதுகளில் பாலஸ்ரீகந்தராஜா தினேஷ்காந்த் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும் ‘மகுடி’க்காக திஷான் சுபராஜ் சிறந்த ஒளிப்பதிவாளராகவும், டினோஜ் மஹேந்திரநாதன் சிறந்த இசையமைப்பாளராகவும், M.நவரெட்ணராஜா சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இரண்டாம் இடத்தைப் பெற்ற ‘கேமரா’ திரைப்படத்திற்காக மகேந்திரன் தினுஷாந்த் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதையும், தாய் கதாபாத்திரத்தில் நடித்த நிலாந்தி சசிகுமார் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளனர்.
ஐந்தாம் இடத்தைப் பெற்ற ‘யாழினி’ திரைப்படத்திற்காக N.நிருஷாந்த் சிறந்த கலை மற்றும் காட்சியமைப்பு இயக்குநருக்கான விருதையும் தனதாக்கியுள்ளார்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










