செப்டம்பர் மாதத்தின் முதல் 27 நாட்களில் நாட்டுக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 143,623 ஆக உயர்ந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டிற்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவே முதலிடத்தைப் வகித்து வருகின்றது.
அதன் பிரகாரம், இம்மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் சுமார் 32 சதவீதமான 45,679 பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இரண்டாவதாக சீனா பதிவாகியுள்ளதுடன், அங்கிருந்து 10,081 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 10,067 சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வகைதந்துள்ளனர்.
இதன்படி ஐக்கிய இராச்சியம் 9,967 சுற்றுலா பயணிகள் மற்றும் ஜெர்மனி 6,745 சுற்றுலா பயணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து முதல் ஐந்து இடங்களுக்குள் அடங்கியுள்ளன.
செப்டம்பர் மாதத்தின் இந்த வருகைகளுடன் சேர்த்து, 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,678,745 ஆக உயர்ந்துள்ளது.
ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் 431,162 வருகைகளுடன் இந்தியா முதன்மைப் பங்களிப்பாளராக விளங்குவதுடன், 159,956 வருகைகளுடன் ஐக்கிய இராச்சியம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவிலிருந்து 110,909 பேரும், ஜேர்மனியிலிருந்து 96,746 பேரும், ஆஸ்திரேலியாவிலிருந்து 86,105 பேரும் வருகை தந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










