இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழ் இந்திய வம்சாவளிச் சிறுமியான 11 வயதுடைய போதனா சிவானந்தன் , செஸ் விளையாட்டில் “மகளிர் கிராண்ட்மாஸ்டர்” (Woman Grandmaster – WGM) பட்டத்தைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் செஸ் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் இந்தப் பட்டத்தைச் சூடிய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற 46 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இங்கிலாந்து அணி சார்பில் போட்டியிட்ட போதனா சிவானந்தன், தனது மூன்றாவது மற்றும் இறுதி WGM தகுதிநிலையை (Norm) நிறைவு செய்து இந்தச் சாதனையைப் பதிவு செய்தார்.
இதற்கு முன்னர் யுக்ரைனின் கதரீனா லக்னோ (Kateryna Lagno) 12 வயதில் மகளிர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், 11 வயதிலேயே இந்தப் பட்டத்தை வென்று போதனா புதிய வரலாறு படைத்துள்ளார்.
இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு 11 சுற்றுகளில் 8 புள்ளிகளைப் பெற்றதன் மூலம், தனது இரண்டாவது “இன்டர்நேஷனல் மாஸ்டர்” (IM) தகுதிநிலையையும் அவர் அடைந்துள்ளார்.
லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த போதனா, கொவிட்-19 ஊரடங்கு காலத்தில் செஸ் விளையாடத் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறார்.
இந்தச் சாதனை குறித்துப் பேசிய போதனா சிவானந்தன், “இச்சாதனையை அடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து செஸ் வரலாற்றில் மேலும் பல சாதனைகளைப் படைக்க விரும்புகிறேன்” எனக் தெரிவித்துள்ளார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









