ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் ஆளுகையை முழுமையாக மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் இச் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் (Attorney General) அனுமதி ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளது.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் சட்டமாக நிறைவேற்றப்படவுள்ளது.
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுத்து விளையாட்டின் தரத்தை உயர்த்தவும் இந்த புதிய சட்டமூலம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








