இலங்கையில் இந்த வருடத்தில் இன்று (28.09.2026) வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மேல் மாகாண பதில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி தென்பட்டபோதிலும், அபாயம் முழுமையாக நீங்கவில்லை என்றும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 7 மாகாணங்கள் இன்னமும் அதி உயர் அபாய மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டல்களைச் சரியாகப் பின்பற்றுவதற்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசேட வைத்தியர் நவிந்த சொய்சா மேலும் வலியுறுத்தினார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








