வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (28.09.2026) ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 81ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.
இன்றைய தினம் அமைச்சர் நாட்டின் தேசிய உரையை நிகழ்த்தவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இம்முறை ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரின் கருப்பொருளான “நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை முகாமை செய்தல், அனைவருக்கும் பலனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை” என்ற கருப்பொருளுக்கு அமைய அமைச்சர் தனது உரையை நிகழ்த்துவார் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுச்சபைக் கூட்டத் தொடருக்கு இணையாக, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









