இம்முறை சிறுபோகத்தின் போது அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகளிடமிருந்து 13,300 மெட்ரிக் தொன் நெல்லினை அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் அநுராதபுரம் மாவட்ட பிராந்திய முகாமையாளர் நிமல் தென்னகோன் தெரிவித்தார்.
சிறு போக நெல் கொள்வனவு சம்பந்தமாக மாவட்ட முகாமையாளரை தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டத்தின் 22 பிரதேச செயலாளர் பிரிவினை மையப்படுத்தி நெல் சந்தைப்படுத்தும் சபையின் அநுராதபுரம் மாவட்ட அலுவலகத்தினால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு வெற்றிகரமான முறையில் முன்னேடுக்கப்பட்டதுடன், 1,650 மில்லியன் ரூபா நிதியினை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல்லினை அரசாங்கத்திற்கு சொந்தமான களஞ்சியசாலை களில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சதோச ஊடாக நெல்லினை குத்தி சந்தைக்கு அரிசியினை வினியோகிக்கும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் அநுராதபுரம் மாவட்ட பிராந்திய முகாமையாளர் நிமல் தென்னகோன் மேலும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









