வளைகுடா பிராந்தியம் உட்பட பல நாடுகளில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஈராம் குழுமத்தின் (ERAM Group) பிரதிநிதிகளுக்கும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையிலான சந்திப்பு 24.09.2026 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
முதலீடுகளுக்குப் பொருத்தமான மற்றும் இலகுவான சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என பிரதமரின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, டிஜிட்டல் பொருளாதாரத்துடன் தொடர்புடைய தேசிய இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில் டிஜிட்டல்மயமாக்கல், சைபர் பாதுகாப்பு, மற்றும் தரவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் தேசிய திறனை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










