செப்டம்பர் மாதத்திற்கான வருவாய் இலக்கை, மாதம் நிறைவடைவதற்கு முன்னரே அடைந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் விஞ்சிய வருமானத்தை இலங்கைச் சுங்கம் பெற்றுள்ளது.
இதற்கமைய, செப்டம்பர் மாதத்திற்காகச் சுங்க திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 195,596 மில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை 23.09.2026 அன்றைய நிலவரப்படி அடைந்துள்ளதுடன், 199,348 மில்லியன் ரூபாய் வருவாயைச் சேகரித்துள்ளது.
இவ்வருடத்திற்காக இலங்கை சுங்க திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்த வருவாய் இலக்கு 2,206.995 பில்லியன் ரூபாயாகும்.
நேற்றைய நிலவரப்படி, சுங்க திணைக்களம் 2,058.033 பில்லியன் ரூபாய் மொத்த வருவாயைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, கடந்த 2025 ஆம் ஆண்டிலும் இலங்கைச் சுங்கத் திணைக்களம் தனது வருவாய் இலக்குகளை விஞ்சி 2,557.535 பில்லியன் ரூபாய் உயர் வருவாயைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()






