வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்காகக் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஆந்திரக் கரைக்கு அப்பால் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 23.09.2026 அன்று காலிங்கப்பட்டினத்திற்கு (Kalingapatnam) தென்மேற்கே கரையை கடந்து நிலப்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது.
பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 24.09.2026 அன்று முற்பகல் 05.30 மணியளவில் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி, அதாவது வட அகலாங்கு 18.3° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 83.7° க்கு அருகில் (காங்கேசன்துறையில் இருந்து வடகிழக்கே சுமார் 1,100 கி.மீ தொலைவில்) நிலைகொண்டுள்ளது.
வரைபடத்தில் ”Warning” (எச்சரிக்கை) பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதால் அப்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
வரைபடத்தில் “Advisory” (அறிவுறுத்தல்) பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதுடன் அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும்.
வட அகலாங்கு 10°N முதல் 22°N வரையிலும் மற்றும் கிழக்கு நெட்டாங்கு 82°E முதல் 90°E வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது அப்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அக்கடல் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்துகிறது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










