சுஜாத தியணி புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்!

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “சுபக”, “தொழில்நுட்பவியல்” மற்றும் “சுஜாத தியணி” புலமைப்பரிசில் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் 23.09.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக , “சுபக”, “தொழில்நுட்பவியல்” மற்றும் “சுஜாத தியணி” புலமைப்பரிசில் திட்டங்களுக்கு காலத்திற்கேற்ப மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொடுப்பனவுகளை கூடுதலான மாணவ மாணவிகளுக்கு வழங்கும் வகையில் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய, அடுத்த ஆண்டு முதல் “சுஜாத தியணி” மற்றும் “தொழில்நுட்பவியல்” புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் மாதந்தம் வழங்கப்படும் 750 ரூபாய் கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிப்பதற்கும், புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 950 இலிருந்து 1000 ஆக அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், அனைத்து கொடுப்பனவுகளையும் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மேற்கொள்வது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

மேலும், மாணவ மாணவிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைப் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை துரிதமாக செலுத்தி முடிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பாடசாலை விவகாரங்கள்) டப்ளியூ.ஏ. நீலிகா பெரேரா, பிரதான நிதி அதிகாரி ஏ.எஸ்.டி. அளுத்கே, கல்விப் பணிப்பாளர் (பாடசாலை விவகாரங்கள்) என்.ஜி.எஸ். சிறிவர்தன உள்ளிட்ட கல்வி அமைச்சு மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects