8 மாகாணங்களில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மின்னணு வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம்!

பயனர்களுக்கு மிகவும் திறமையான மற்றும் உயர்தர சேவையை வழங்கும் நோக்கில், மின்னணு வாகன வருமான வரி உத்தரவு பத்திர (eRL 2.0) தொகுதியை புதுப்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, இந்த மாதம் 25 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பின்வரும் 8 மாகாணங்களில் மின்னணு வாகன வருமான வரி உத்தரவு பத்திரம் வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என உரிய மாகாண சபைகள் அறிவித்துள்ளன.

மத்திய மாகாணம்

வடமத்திய மாகாணம்

வடமேல் மாகாணம்

தென் மாகாணம்

கிழக்கு மாகாணம்

வட மாகாணம்

சப்ரகமுவ மாகாணம்

ஊவா மாகாணம்

குறித்த தொகுதி புதுப்பிப்புகளின் பின்னர், மீண்டும் இந்த மாதம் 29 ஆம் திகதி முதல் வழமை போல் சேவைகளை வழங்குவதற்காக தொகுதி தொழிற்படுத்தப்படும்.

இந்தத் தற்காலிக சேவை இடைநிறுத்தம் காரணமாக சேவைபெறுநர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு உரிய மாகாண சபைகள் வருத்தம் தெரிவித்துள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects