ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூன்று புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் படி, யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரி ஆனந்தி கனகரத்தினம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதி மற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரி ஞானேச லலித் கண்ணங்கர ஆகியோர் புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 23.09.2026 அன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()






