இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கான புதிய அமெரிக்க ஆதரவு, கிளவுட் உட்கட்டமைப்பு மற்றும் துறைமுக நவீனமயமாக்கல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் நலன்களை முன்னேற்றுவதற்கான வலுவான செயற்றிட்டம் தொடர்பிலும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










