ஆசிய பெண்கள் கிரிக்கெட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற பாகிஸ்தான் அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

மூன்றாவது இடத்திற்கான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி பெற்றது.

இந்நிலையில் 146 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 31 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி ஆசிய விளையாட்டு போட்டிகளின் கிரிக்கெட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

அதேநேரம் இந்த கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி முற்பகல் 10.30க்கு ஆரம்பமாகியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects