ViYASA தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC) இன்று திறப்பு!

முதலீடுகள் மற்றும் கைத்தொழில்சார் அரச நிறுவனங்களுக்கு இடையே உள்ள நிர்வாக மற்றும் ஒழுங்குபடுத்தல் தடைகளை நீக்கி, அந்தச் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC) இன்று (22.09.2026) திறக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் கருத்தியலுக்கு ஏற்ப, கைத்தொழில் துறையில் சாதகமான மாற்றமொன்றை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த மையம் ஸ்தாபிக்கப்படுகின்றது.

வர்த்தகமொன்றை தொடங்கும்போதும் அதனை முன்னோக்கிக் கொண்டு செல்லும்போதும் அரச பொறிமுறையுடன் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்குவதுடன், தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அவசியமான வசதிகளைச் செய்துக்கொடுக்க இம்மையத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

“ViYASA” தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC) கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, இலக்கம் C-80 கட்டிடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட செயற்படுகின்றார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரின் தலைமையில் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பங்குபற்றலுடன் இந்த மையம் திறக்கப்படவுள்ளதுடன், https://nbfc.presidentsoffice.gov.lk இணையத்தளமும் இதன்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects