ஒகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கத்தில் அதிகரிப்பு!

2026 ஒகஸ்ட் மாதத்திற்கான தேசிய முதன்மை பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு 8.1% ஆக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் இன்று (21.09.2026) வெளியிட்டுள்ள இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கத்தின் படி, ஜூலை மாதத்தில் 7.2% ஆக பதிவாகியிருந்த பணவீக்கமானது, ஓகஸ்ட் மாதத்தில் 8.1% ஆக உயர்வடைந்துள்ளது.

உணவுப் பணவீக்கமானது கடந்த ஜூலை மாதத்தில் நிலவிய 4.9% இலிருந்து ஒகஸ்ட் மாதத்தில் 6.6% வரை அதிகரித்துள்ளது.

அதேவேளை, உணவு அல்லா பணவீக்கமானது ஜூலை மாதத்தில் 9.2% ஆக பதிவாகியிருந்தது.

எனினும் ஒகஸ்ட் மாதத்தில் 9.3 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் போக்குவரத்துக்கான பணவீக்கமும் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 19.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஜூலை மாதத்தில் 18.9 சதவீதமாக காணப்பட்டதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects