2026 கல்விப் பொதுத் தராதரப் உயர்தர எழுத்து மூலப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களுக்கான செயன்முறைத் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பின்வரும் பாடங்களுக்கான செய்முறை பரீட்சை இம் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன:
நடனம் (தேசிய)
நடனம் (பரதம்)
சங்கீதம் (கிழக்கத்தேய)
சங்கீதம் (கர்நாடகம்)
சங்கீதம் (மேற்கத்தேய)
நாடகமும் அரங்கியலும் (சிங்களம்)
நாடகமும் அரங்கியலும் (தமிழ்)
நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்)
மேலும், பொறியியல் தொழினுட்பவியல் பாடத்திற்கான தேர்வுகள் (30.09. 2026 . 10.10.2026) வரையிலும், மனையியல் பாடத்திற்கான தேர்வுகள் (10.10.2026 – 20.10.2026) வரையிலும், உயிரியல் முறைமைகள் தொழினுட்பவியல் பாடத்திற்கான தேர்வுகள் (17.10.2026 – 21.10.2026) வரையிலும் நடைபெறவுள்ளன.
மேற்குறிப்பிட்ட பாடங்களுக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் (Admission Cards) அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கும் செய்முறைத் தேர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவிக்கிறது.
இது தவிர, பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம், செய்முறைத் தேர்வுகள் ஆரம்பமாவதற்கு 07 நாட்களுக்கு முன்னரிலிருந்து அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம்செய்து கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஏதேனும் விசாரணைகள் இருப்பின், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பின்வரும் தொலைபேசி எண்கள் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும்:
அவசர தொலைபேசி எண்: 1911
தொலைபேசி எண்கள்: 0112785922, 0112784537, 0112786616, 0112784208
மின்னஞ்சல்: gcealexam@gmail.com


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









