நிறுவன ஒழுக்க விதிக்கோவையை தயாரிப்பது தொடர்பான ஒரு நாள் செயலமர்வு!

நிறுவன ஒழுக்க விதிக்கோவையை தயாரிப்பது தொடர்பான ஒரு நாள் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களில் நிறுவப்பட்ட 244 உள்ளக விவகார பிரிவுகளுக்காக இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேர்மை மேம்பாட்டு பணியகத்தின் தலைவரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான சந்திமா விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே. பிரசன்ன சந்தித் ஆகியோர் வளவாளர்களாக பங்கேற்ற இந்த செயலமர்வில், அரச திணைக்களங்கள், அரச நியதிச் சபைகள், மாகாண அமைச்சுகள் மற்றும் மாகாணத் திணைக்களங்களின் உள்ளக விவகார பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதற்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாண அமைச்சுகள் மற்றும் மாகாணத் திணைக்களங்களின் அதிகாரிகளும் இணையவழியில் இந்த செயலமர்வில் இணைந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects