இலங்கை சுங்கத்தினால் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் 11.09.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை சுங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை, அது தொடர்பான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் இலங்கை சுங்கத்தின் தொழில்நுட்பத் தயார்நிலை குறித்து சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவு என்பனவற்றினால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இங்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கை சுங்கம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவு ஆகியன இணைந்து இச்செயற்பாட்டிற்காக வழங்கி வரும் பங்களிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளால் பாராட்டப்பட்டதுடன், இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கான தமது இணக்கப்பாட்டையும் அவர்கள் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட, இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம உட்பட வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவு மற்றும் இலங்கை சுங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர், சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி Dinar Prihardini மற்றும் Klakow Akepannidtaworn ஆகியோரும் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








