செப்டெம்பர் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ கொடுப்பனவுக்கான திகதி அறிவிப்பு!

செப்டெம்பர் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ கொடுப்பனவு எதிர்வரும் 16 ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

அறிக்கையொன்றை வெளியிட்டு நலன்புரிப் நன்மைகள் சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் பலனடையும் 9,99,053 குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 9 பில்லினே 181 மில்லியனே 696 ஆயிரத்து 250 ரூபா நிதி வைப்புச் செய்யப்படவுள்ளது. 

அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் பலனடையும் 2,13,335 குடும்பங்களுக்கு 2 பில்லியனே 120 மில்லியனே 856 ஆயிரத்து 250 ரூபா நிதியை செலுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன்படி, இந்த நிதியை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரிப் நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects