காத்தான்குடியில் பெண்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு – இணைய உலகில் உங்களை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு? எனும் தலைப்பில் செயலமர்வு!

பெண்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு – இணைய உலகில் உங்களை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு? எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 07.09.2026 அன்று நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச மகளிர் மகா சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வளவாளராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் விரிவுரையாற்றினார்.

பிதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விஷேட அதிதியாக ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான பெண்கள் அமைப்பின் (IWARE ) பணிப்பாளர் அனீஸா பிர்தௌஸ் கலந்துகொண்டார்.

இணையத்தினூடான சேவைகளில் இடம்பெறும் முறைகேடுகள் அவற்றினை தவிர்க்கும் முறைகள் பிள்ளைகளின் இணைய பாவனைகள் இதனால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்களால் ஏற்படும் சாதக பாதகமான விடயங்கள் சமூக சீர்கேடுகள் இதனால் பெண்கள் தொடர்பான வன்முறைகள் தொடர்பாக விரிவுரை நடைபெற்றன.

இச்செயலமர்வானது காத்தான்குடி பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஸ்மினா ரஸ்மினின் நெறிப்படுத்தலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects