நைல் குட்டி நீர்யானைக்கு பெயர் சூட்ட பொதுமக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிறந்த குட்டி நைல் நீர்யானைக்கு (Nile Hippopotamus) பெயர் பரிந்துரைப்பதற்கான வாய்ப்பினை விலங்கு ஆர்வலர்களுக்கு மிருகக்காட்சிசாலை நிர்வாகம் வழங்கியுள்ளது.

இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இணையவழிப் படிவத்தின் ஊடாக தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்து, விரும்பிய பெயரை பொது மக்கள் பரிந்துரைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மிருகக்காட்சிசாலையின் https://forms.gle/TE1LVndMqtBMva1fA என்ற உத்தியோகபூர்வ இணையவழிப் படிவத்தின் ஊடாக பொது மக்கள் சமர்ப்பிக்க முடியும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.

மிருகக்காட்சிசாலையின் புதிய உறுப்பினரான குட்டி நைல் நீர்யானைக்கு பெயர் சூட்டும் இந்த முயற்சியானது, குறிப்பாக விலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட பொது மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects