மட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழா 2026 இறுதி நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவும், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து நடாத்திய பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட விளையாட்டு விழா 2026 இறுதி நிகழ்வுகள் 09.08.2026 அன்று செட்டிபாளையம் கண்ணகி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள மாகாண பணிப்பாளர் ஏ.ஜி.எம்.பஷால் ஆகியோர் கலந்துகொண்டதுடன், கிழக்கு மாகாண விளையாட்டுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், பிரதேச செயலகங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது சுவட்டு விளையாட்டு நிகழ்வுகளின் இறுதி போட்டிகளும், பெண்களுக்கான மாவட்ட மட்ட உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டிகளும் இடம்பெற்றதுடன், மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலக (பன்சேனை) அணியும், மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலக (அம்பிளாந்துறை) அணியும் பலப்பரீட்சை நடத்தியிருந்ததுடன், மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலக (பன்சேனை) அணி வெற்றிவாகை சூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களின் இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும், விளையாட்டு ஒற்றுமையை மேம்படுத்தும் வகையிலும் இவ்விளையாட்டு விழா நடைபெற்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects