ஓகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, இது மொத்த வருகையில் 18% ஆகும்.

அதேபோல், சீனாவில் இருந்து 3,031 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் (UK) இருந்து 4,922 பேரும், பிரான்சில் இருந்து 3,908 பேரும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஓகஸ்ட் 06 வரையிலான காலப்பகுதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,386,228 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில் இந்தியாவில் இருந்து 346,057 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 135,323 பேரும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects