மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வேடர் குடியிருப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள கிளினிக் சென்டரில் “முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்புக்கான தேசிய வாரத்தினை முன்னிட்டு” வியத்தகு சிறுவர் உலகிற்கு ஒளிவிளக்காகும் அன்பான குடும்பம்” எனும் தொனிப் பொருளில் கர்ப்பிணி தாய்மார்களை விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்றது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கி.விஷ்ணுகாந்த்தின் ஒருங்கிணைப்பின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தெட்ஷண கௌரி தினேஷின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி ச.சிவலக்சன் பங்குபற்றினர் .
இதில் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொது சுகாதார தாதிய உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








