மத்திய மலைநாட்டில் இன்று (07.08.2026) இடைக்கிடையாக பெய்து வரும் கனமழையுடன் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், ஹட்டன் – நுவரெலியா மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகளில் தொடர்ச்சியான மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, அடர்ந்த பனிமூட்டம் காரணமாக வீதிகள் தெளிவாகத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால், குறித்த வீதிகள் ஊடக பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடனும், வாகனங்களை மெதுவாகவும் செலுத்துமாறு நுவரெலியா அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










