அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்று (06.08.2026) இரவு 10.00 மணி முதல் நாளை (07.08.2026) அதிகாலை 5.00 மணி வரை 7 மணித்தியாலங்களுக்கு வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
பெருங்கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ அபிவிருத்தி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமொன்றுக்கான அவசியமான அபிவிருத்தி பணிகளுக்காகவே இந்த நீர் துண்டிப்பு மேற்கொள்ளப்படுவதாக குறித்த சபை குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதி மக்கள் அவசியமான நீரை முற்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், காணப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பாகவும் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









