நாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ‘மெலத்தியன்’ திரவத்தைப் பயன்படுத்தும் பணிகள் இன்று (05.08.2026) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன் பிரகாரம், சுகாதார அமைச்சர், வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய அரசாங்கத்தினால் மெலத்தியன் திரவத் தொகுதி 04.08.2026 அன்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் குறித்த பூச்சிக்கொல்லி மருந்துத் தொகையை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 86,947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு அபாயம் நிலவும் 137 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நுளம்பு ஒழிப்பு திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந் நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் கபில கன்னங்கர, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் (ஊடகம், தகவல் மற்றும் கலாசார விவகாரங்கள்) ரோஷ்னி தாம்சன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








