வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச்செயலாளரும் UNDP இன் ஆசிய-பசுபிக் பிராந்திய பணிப்பாளருமான கன்னி விக்னராஜா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐ.நா அமைப்பில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கும் இலங்கை அதிகாரியான கன்னி விக்னராஜாவுடனான இச்சந்திப்பில், நாட்டின் அபிவிருத்தி ஒத்துழைப்புகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதன்போது அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் மற்றும் தேசிய மனிதவளத்தின் திறன்களை மேம்படுத்துதல்.
மற்றும் காலநிலை வரவுகள் (Climate Credits), பசுமை மற்றும் நீலப் பத்திரங்கள் (Green and Blue Bonds) போன்ற புதுமையான காலநிலை நிதியளிப்பு தீர்வுகள் உள்ளிட்டவற்றுடன் எதிர்கால கூட்டு முயற்சிகளுக்காக நாட்டின் சுகாதார மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு முன்னுரிமை அளித்து ஒத்துழைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










