இலங்கை திரைப்படத்தின் போஸ்டர் இந்திய தொலைக்காட்சியில் வெளியீடு!

இந்தியாவின் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மகாநடிகை’ நிகழ்ச்சியில் இலங்கையில் தயாரிக்கப்படும் ‘TVK’ திரைப்படத்தின் போஸ்டரானது 02.08.2026 அன்று வெளியிடப்பட்டது.

இப்போஸ்டரானது கடந்த ‘மகாநடிகை’ நிகழ்ச்சியில் பங்குபற்றியவரும் ‘TVK’ திரைப்படத்தின் கதாநாயகியுமான நடிகை கவிப் பிரியா வெளியிட்டு வைத்தார்.

பிரவீன் கிருஷ்ணராஜாவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான ‘தீயது வெல்லக் கேளீர்’ (TVK) திரைப்படமானது இலங்கை மற்றும் இந்தியாவில் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆர்ஜே ஜனா, ஜானு முரளிதரன், வேட்டையன் இம்ரான் மற்றும் ரகுதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இலங்கை திரைப்படம் ஒன்றின் போஸ்டர் இவ்வாறு இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் வெளியிடுவது மற்றும் திரையிடுவது மக்கள், ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் ஆர்வத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects