பிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவதற்காக விசேட ஒழுங்கு ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

நாட்டின் பிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவதற்காக விசேட ஒழுங்கு ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டத்தைக் களுவாஞ்சிகுடி நகரிலிருந்து தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நாட்டில் ஆண்டுதோறும் நிகழும் வீதி விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துகள் என்பதால், அதைக் குறைப்பதற்காகவே இவ் விசேட ஒழுங்கு அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் பொதுவாக வீதி விபத்துகளால் சுமார் 2,500 பேர் உயிரிழக்கின்றனர். 2025 ஆம் ஆண்டில் 2,750 பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் முன்னாலும் பின்னாலும் பயணித்தவர்களில் 2019 ஆம் ஆண்டில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஒன்பது ஆண்டுகளில் மோட்டார் சைக்கிள்களில் சென்று 9,000 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் வீதி விபத்துகளையும் மரணங்களையும் தடுக்க வேண்டுமென்றால், மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இலங்கையில் முதன்முறையாகக் களுவாஞ்சிகுடி நகரத்தில் மோட்டார் சைக்கிள்களுக்காகவே பிரதான வீதியின் ஒரு பகுதியை நாங்கள் ஒதுக்குகிறோம். வெள்ளைக் கோட்டினால் அல்லாமல், தடுப்புகளைப் (Breakers) போட்டு உருவாக்குகிறோம். ஏனெனில் அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் சற்று அதிகமாகும்.” என்றார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects