இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாகத் தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, 31.07.2026 அன்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் சிறந்த இராணுவச் சேவை, முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் தாய்நாட்டிற்காகச் செய்த அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதமர் பாராட்டினார்.
இதன்போது, தனது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்தின் செயற்பாட்டுத் திறன்கள் மற்றும் தொழில்சார் தரங்களை உயர்மட்டத்திற்குக் கொண்டுவருவதற்காகத் தான் ஆற்றிய பங்களிப்பை முன்னாள் இராணுவத் தளபதி நினைவுகூர்ந்தார்.
சந்திப்பின் இறுதியில், பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் இராணுவத் தளபதியின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகப் பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
(பிரதமர் ஊடகப் பிரிவு)




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









