4 பிரதான தொழில்சார் பிரிவுகளைச் சேர்ந்த 14 துறைகளுக்காக புதிய நியமனங்கள்!

காதார சேவையின் நான்கு தொழில்சார் பிரிவுகளைச் சேர்ந்த பதினான்கு துறைகளுக்காக 1,444 புதிய உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகளும் நியமனங்களும் வழங்கும் நிகழ்வு 01.08.2026 அலரி மாளிகை வளாகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ கலந்துகொண்டார்.

இதன்போது, முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பமல்லாத சேவைகள், ஆரம்ப தொழில்நுட்ப சேவைகள், ஆரம்ப அரைத்தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆரம்ப தொழில்நுட்பமல்லாத சேவைகள் ஆகிய நான்கு தொழில்சார் பிரிவுகளின் கீழ் உள்ள 14 துறைகளுக்காக 1,444 உத்தியோகத்தர்களுக்கு நியமனங்களும் பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டன.

அதன்படி, முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பமல்லாத சேவைகள் பிரிவின் கீழ் 06 மருத்துவ விநியோக உதவியாளர்களும், 50 விடுதி எழுத்தாளர்களும், 37 விடுதிப் பொறுப்பாளர்களும், ஆரம்ப தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் கீழ் 07 சுகாதார சாரதிகளும், 121 வைத்தியசாலை மேற்பார்வையாளர்களும் (சிற்றூழியர் நிர்வாகி), ஆரம்ப அரைத்தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் கீழ் 03 சுற்றுலா விடுதி பொறுப்பாளர்களும், 07 மின் உயர்த்தி இயந்திர இயக்குநர்களும், 37 எலும்பியல் தொழில்நுட்ப உதவியாளர்களும், 31 குழாய் பொருத்துநர்களும், 64 தையல் இயந்திர இயக்குநர்களும், 144 சமையலாளர்களும் மற்றும் ஒரு தச்சர் உத்தியோகத்தரும், ஆரம்ப தொழில்நுட்பமல்லா சேவைப் பிரிவின் கீழ் 651 சுகாதாரப் பணி உதவியாளர்களும், 285 கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்களும் நியமனம் பெற்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ,

அரசாங்கம் என்ற வகையில், மக்கள் வழங்கிய ஆணைக்கிணங்க “வளமான நாடு, அழகிய வாழ்க்கை” என்ற இலக்கை அடையும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும், நாட்டில் வாழும் 21.7 மில்லியன் மக்களுக்கும் அந்த அழகிய வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காக அரச சேவையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இந் நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர்களான ஜனக கித்தசிறி குணவர்தன, விசேட வைத்தியர் குமார விக்ரமசிங்க, கே.பி. யோகசந்திர, சாமிக எச். கமகே, ஹர்ஷனி சிறிநாம ஆகியோருடன் பிரதிப் பணிப்பாளர் நாயகங்கள், சிரேஷ்ட உதவிச் செயலாளர்கள், பணிப்பாளர்கள், வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பணிப்பாளர்கள், நிர்வாக அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects