மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான அறிவித்தல்!

நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 02.08.2026 அன்று இரவு 11:00 மணிக்கு இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. 

​அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​அத்துடன் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​இது தவிர,கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் (Level 1) கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects